பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி அவர்கள் 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீட்டர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் 2 தங்கப் பதக்கங்களையும் 800 மீட்டர் ஓட்டபோட்டி ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று(நவம்பர் 24) முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருமதி. அகிலத்திருநாயகி அவர்களது சாதனைகள் தொடர்பாக வாழ்த்துரைகள் இடம்பெற்றதுடன் நினைவுச் சின்னம் மற்றும் பணமுடிப்பு வழங்கியும் பொன்னாடை மாலை அணிவித்தும் திருமதி. அகிலத்திருநாயகி அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) திரு.எஸ்.குணபாலன்,பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. லிங்கேஸ்வரன் , பிரதம கணக்காளர் திரு.ம. செல்வரட்ணம், சமுர்த்தி பணிப்பாளர் M.முபாரக், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி க.ஜெயபவானி , பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு.சண்முகலிங்கம் திருமதி. அகிலத்திருநாயகி அவர்களது ஆசிரியர் திருமதி.ஐயம்பிள்ளை எனப் பலரும் கலந்துகொண்டனர்.