நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தின் இவ் ஆண்டுக்கான பெருவிழாதிருப்பலி இன்று (டிசம்பர் 03) காலை 06. 00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
ஆலய வருடாந்த திருவிழா வழிபாடுகள் பங்குத்தந்தை அருட்பணி ப. பத்திநாதன் அடிகளாரின் நெறிப்படுத்தலுடன் புனிதரின் திருக்கொடியை ஏற்றப்பட்டு கடந்த நவம்பர் 24 ஆரம்பமானதுடன் திருப்பலி நிறைவில் நெடுந்தீவுகல்விக் கோட்டத்தை சார்ந்து உயர்தர பரீட்சைக்காக தோற்றும் அனைத்து மாணவர்களுக்காக நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை பிரார்தித்து , ஆசீரும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம் (டிசம்பர் 02) மாலை புனித சவேரியார் ஆலய நற்கருணைபெருவிழா இடம்பெற்றதுடன் நற்கருணை பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றது.