மருத்துவமனைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள் இனறு காலை (பெப்ரவரி 23) 8 மணி முதல் 12 மணிவரை 4 மணி நேரப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மேலதிக நேரக் கொடுப்பனவை வரையறுக்கும் சுற்றறிக்கையை நீக்குதல், வாரத்தில் ஐந்து நாள்களை மட்டுமே வேலை நாள்களாக அறிவித்தல், அதிகரித்துள்ள மின் கட்டணத்தைக் குறைத்தல், பொது நிர்வாகச் சுற்றறிக்கையின்படி அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைச் சிற்றூழியர்களின் பணிப் புறக்கணிப்பால் மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற வந்திருந்த வெளிநோயாளர்கள் மற்றும் கிளினிக் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கனர்.