இந்துக்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த பண்டிகையானது உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று கொண்டாடப்படுகிறது.
மக்கள் மனதில் உள்ள இருளையும், அகந்தை, ஆணவம், தீய எண்ணங்களை நீக்கி, தர்மம், நேர்மை, ஒழுக்கம், பகிர்தல் எனும் தீபத்தை ஏற்றுவதே இந்த பண்டிகையின் நோக்கமாகும். சுருங்கமாக சொல்வதானால் இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் தீப ஒளித்திருநாள் எனப்படும்.
இந்த பண்டிகை இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
‘தீபம்’ என்றால் ‘விளக்கு’, ‘வளி’ என்றால் ‘வரிசை’ என்று பொருள் கொள்ளலாம். அகத்தில் இருக்கும் இருள் எனும் தீய எண்ணங்களை நீக்கி, தூய்மை எனும் ஒளியை அடைவதே இதன் தத்துவமாகும்.
புராணங்களின் படி, மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்த நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தார். அப்போது நரகாசுரன் இறக்கும் போது கிருஷ்ணனிடம், தான் இறக்கும் இந்த நாளை மக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அன்று முதல் மக்கள் தீபாவளியை , விளக்குகளால் ஒளி ஏற்றி பெரும் பண்டிகையாகக் கொண்டாடி வரும் மரபு இந்துக்களிடையே காணப்படுகிறது.
உலகிலேயே அதிக மழைபெறும் பகுதியான சிரபுஞ்சியை அடக்கிய அழகிய மாநிலம். இங்கு தான் நராகசுரன் வாழ்ந்துவந்தான்.இங்கு அவன் அழிக்கப்பட்டான் என்பது ஆச்சரியம். ஆனால், அதுதான் புராணம் கூறும் உண்மை.
அஸ்ஸாமுக்கு காமரூபம் என்ற பெயரும் உண்டு. இந்த பெயர் ஏன் வந்தது என்றால் இங்கு காமா என்ற பெயரில் சக்தி இருக்கிறாள். அஸ்ஸாமுக்கு இன்னொரு பெருமையும் உண்டு.
மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்து கடலுக்கு கீழே மூழ்கியிருந்த பூமியைவராகமூர்த்தி தனது தெற்றுப்பல் நுனியில் தூக்கி வந்த போது அவரது பல் பட்ட இடமும் அஸ்ஸாம் தான்.
பூமாதேவிக்கும், வராக மூர்த்திக்கும் தொடு உணர்வு ஏற்பட்டதால் பிறந்தவன்தான் நரகாசுரன். நல்லது கெட்டது எல்லாவற்றுக்குமே மூலம் ஒரே பரமாத்மாதான் என்றுதானே நம் சாஸ்திரம் கூறுகிறது. அதை நிரூபிக்கும் விதமாகத்தான் பகவானுக்கும் பூமா தேவிக்கும் நரகாசுரன் பிறந்தான்.
நரகாசுரன் பிரம்மாவைக் குறித்து தவம் செய்து அரிய பல வரங்களைப் பெற்று மிகவும் பலத்துடன் விளங்கினான். பூலோகத்தையே நரகம் போல் ஆக்கிவந்ததால் தான் இவனுக்கு நரகாசுரன் என பெயர் வந்தது எனவும் கூறப்படுவது உண்டு.
அஸ்ஸாம் என்று தற்போது அழைக்கப்படும் காமரூபத்தில் ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்ற ஊரை தலைநகரமாகக்கிக்கொண்டு காட்டாட்சி நடத்திவந்தான் நரகாசுரன்.
இவன் தொல்லை இருந்து வந்தாலும் அவனைப் பற்றி பகவானிடம் நரகாசுரன் பற்றி முறையிடாமல் இருந்தான் இந்திரன். இந்நிலையில் பகவான் கிருஷ்ணாவதாரம் எடுத்தார்.
தனது தாய்மாமனான கம்சனை அழித்தார். தன்னை எதிர்த்த ஜாரசந்தனையும் விரட்டிவிட்டுகிருஷ்ணபகவான் துவராகபுரியில் தங்கியிருந்தார்.
ருக்மிணியின் உறவினரோடு சண்டையிட்டு அவளை திருமணம் செய்து கொண்டார். சத்யபாமா உள்ளிட்ட அநேகபத்தினிகளையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருந்தார் கிருஷ்ண பகவான்.
தேவேந்திரன் பகவானிடம் நரகாசுரன் பற்றி முறையிட்டான். கிருஷ்ணர் கருடனை அழைத்து அவன் மேலேறி சத்யபாமைவையும் உடன் அழைத்துக் கொண்டு ப்ராக்ஜ்யயோதிஷபுரத்திற்கு புறப்பட்டு சென்றார்.
சத்யபாமாவிடம் உள்ள உயர்ந்த குணங்களை காட்டுவதற்காகவே அவளை பகவான் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
பெற்ற பிள்ளையாய் இருந்தாலும், உலகம் முழுவதிற்கும் எதிரியாக இருக்கும் தன் மகன் சாகவேண்டும் என நினைத்தாள்.
ப்ராகஜ்யோதிஷபுரத்துக்குள் நுழைய முடியாதபடி பல கோட்டைகளை அமைத்து அதன் உள்ளே வாழ்ந்து வந்தான் நரகாசுரன்.
முதலில் வெளி எல்லையில் மலைகளால் ஆன கோட்டை. அதன் உள்ளே ஆயுதங்களால் ஆன கோட்டை. அதன் பின் நீரை மந்திர சக்தியால் ஆன தண்ணீர்கோட்டை, அதற்குள் நெருப்பால் ஆன கோட்டை, அதன் பின் காற்றால் ஆன வாயுக் கோட்டை என பல கோட்டைகளுக்குள் இருந்தான் அவன்.
ஒவ்வொரு கோட்டையாக தகர்த்துக் கொண்டு சங்கை முழங்கி நரகாசுரனை போருக்கு அழைத்தார் கிருஷ்ணன்.
நரகாசுரன் மிகப் பெரிய யானைமேல் ஏறிக்கொண்டு போரிட வந்தான். கருடன் மேலமர்ந்து பகவான் போரிட்டார். கருடனும். சத்யபாமாவும் நரகாசுரன் படை பலத்தை குறைத்தனர்.
அசுர படை முழவதும் அழிக்கப்பட்டுகிருஷ்ணருக்கும், நரகாசுரனுக்கும் நேருக்கு நேர் போர் நடந்தது. கிருஷ்ணரின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நரகாசுரன் கஷ்டப்பட்டான்.
முடிவில் சக்ராயுதத்தால் நராகாசுரனை சம்ஹாரம் செய்து உலக மக்களுக்கு விமோசனம் அளித்தார்.
இறக்கும் சமயத்தில் நரகாசுரன் தான் அழிந்த தினத்தை உலகமெல்லாம் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டான். இவ்வாறே உலகவாழ் இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.