நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்று 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையில் 3A சித்தியைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும் நெடுந்தீவுக்கும் பெருமை சேர்த்த விஜயகுமார் டர்ஜினி (நெடுந்தீவு கோட்டத்தில் முதலிடத்தையும் தீவக மட்டத்தில் 3 ஆம் இடம்) கௌரவிக்கும் வகையில் மடிக்கணினி ஒன்று நேற்று (ஒக்ரோபர் 4) பரிசளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி நெடுந்தீவு கோட்டத்தில் முதலிடத்தையும் தீவக மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைபிறிற் இன்ரநஷனல் ஹப் பிறைவேற் லிமிரட் நிறுவனத்தினால் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று வித்தியாலய மண்டபத்தில் அதிபர் அ. பீலிக்ஸ் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளரும் வித்தியாலயத்தின் பழைய மாணவரான மா. பரமேஸ்வரன் வைபவ ரீதியாக மடிகண்ணியை மாணவியிடம் கையளித்தார்.
இப்பரீட்சையில் சித்தியடைந்த மற்றைய மாணவியும் கௌரவிக்கப்பட்டார். கைபிறிற் இன்ரநஷனல் ஹப் பிறைவேற் லிமிரட் அலுவலர்கள், சபரீஷ் அறக்கட்டளை நிறுவுனர், பெற்றோர், நெழுவினி விநாயகர் ஆலய குரு, பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.