நெடுந்தீவின் உரிமையுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் பொதுமக்களின் காணிகளை வளப்படுத்துவதுடன் அவர்களின் உரிமையினை உறுதி செய்து கொள்ளும் வகையில் நெடுந்தீவு ஊரும் உறவு அமைப்பானது அவற்றை பொறுப்பேற்று பராமரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
எனவே இந்தத் திட்டத்தில் விருப்பம் உடையவர்கள் அமைப்புடன் தொடர்பு கொண்டு பராமரிப்பின்றி உள்ள நிலங்களை வளப்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், செயற்பாடுகள் தொடர்பான விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
1. காணி உரிமையினை ஐந்து ஆண்டு ஒப்பந்தம்(பராமரித்து, பாதுகாத்தல் மட்டும்) ஒன்றின் ஊடாக அது உங்களின் உரிமைச் சொத்து என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளல்.
2. காணியைத் துப்பரவு செய்தல்.
3. காணிக்கு பாதுகாப்பு வேலி அமைத்தல்.
4. காணியில் நிலையான வருமானம் தரக்கூடிய வகையில் பனை, தென்னை மரங்கள் தேவைப்படின் வைத்து வளர்த்தல்
5. காணியை வளமான காணியாக வழ்வாதாரம் தரும் பயிர்களை (மீளகாய், கத்தரி, மரக்கறி, சாமை, வரகு, பனம் பாத்தி) நட்டு பொருளாதார நெருக்கடியை நெடுந்தீவில் குறைத்தல் அல்லது இல்லாமல் செய்தல்.
6. நெடுந்தீவில் பாவனை அற்று இருக்கும் வீடுகளை பராமரித்தல். இந்தச் செயற்திட்டத்தை உரிமையாளர் விருப்பிற்கு ஏற்ப அனுசரணையுடன் அதனை புனரமைக்க வேண்டுமானால் புனரமைத்து பாதுகாத்து வழங்க முடியும். எனவே இந்த தேவை உடையவர்களும் அமைப்புடன் தொடர்பு கொள்ள முடியும்,
7. காணிகளில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்காக தங்களால் வழங்கப்படும் நிதியில் இருந்து நெடுந்தீவு ஊரும் உறவின் உறுப்பினர்கள், பணியாளர்களின் தொழில் வாய்ப்பை நீடித்து நிலைத்திருக்க உறுதி செய்து கொள்ளல்.
தொடர்புகளுக்கு:-
நிர்வாகம்
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பபு (DO-U)
+94 (77) 840 0534