18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவமுகாம்களில் தலைமைத்துவ பயிற்சியை வழங்கவேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இராணுவமுகாம்களில் பயிற்சி வழங்கப்படுவது இளைஞர்களை படைவீரர்களாக்கும் நடவடிக்கையில்லை என அமைச்சர்தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பயிற்சி சமூகத்தில் ஒழுக்கத்தை பேணுவதற்கு உதவும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒழுக்கநெறியில் பாரிய வீழ்;ச்சி ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் சந்தேகம் அல்லது அச்சம் இன்றி வாழவேண்டும் என்றால் சமூகத்தில் மோசடிக்காரர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் இல்லாநிலையேற்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
குழந்தையொன்று காணாமல் போனால், நாட்டின் சூழ்நிலை காரணமாக குழந்தையின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
18 வயதிற்கு மேற்பட்டஇளைஞர்களிற்கு இராணுவபயிற்சிகுறித்த யோசனையை நான் நாடாளுமன்றத்தில் முன்வைத்தவேளை என்னை கடுமையாக விமர்சித்தனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.