நேற்றைய தினம் (16) நாட்டில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14 பெண்களும் 17 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,733 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் தற்போது கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 283,040 ஆக அதிகரித்துள்ளது.
இது இவ்வாறு இருக்க கொரோனா தொற்றில் இருந்து மேலும் 962 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255,833 ஆக அதிகரித்துள்ளது.