நெடுந்தீவு மேற்கு பகுதிக்கான பிரதான வீதி இதுவரைக்கும் முழுமையாக சீர் செய்யப்படாமையால் அப்பகுதி மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பிரதான வீதியில் ஏறத்தாழ முக்கால் பங்கு வீதி கொங்கிறீற் இடப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளபோதும் மிகுதிப் பகுதி இதுவரைக்கும் திருத்தம் செய்யப்படாமல் இருப்பதினால் அதனூடாக பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதுடன் வாகன உரிமையாளர்களும் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
எனவே உரியவர்கள் இதற்கான தீர்வு கண்டு வீதியினை செப்பனிட்டு பொது மக்களின் இலகுவான போக்குவரத்துக்கு வழி சமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.