சிசேரியன் பிரசவத்தின் போது தாய்மார்களை மீண்டும் பிரசவிக்க முடியாதவகையில் மலட்டுத் தன்மை ஆக்கியதாக, ஒரு சில தரப்பினரால்குற்றஞ்சாட்டப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்டவைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி நிரபராதி என விடுதலைசெய்யப்பட்டுளளார்.
குருணாகல் நீதவான் நீதிமன்றம் இன்று (நவம்பர்06) இவ்வுத்தரவைவழங்கியுள்ளது.
அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லையென சட்ட மாஅதிபர்திணைக்களம் அறிவித்ததை அடுத்து 5 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த வழக்கின் தீர்ப்பில் அவரை நிரபராதி என விடுதலை செய்யுமாறு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.