ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நாடு தழுவிய தபால்நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று (ஜூலை15) நள்ளிரவு12 மணி முதல் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைமுன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் தபால் துறையில் முறையான ஆட்சேர்ப்புநடைபெறவில்லை என்பது இந்தப் போராட்டத்தின் முக்கிய காரணமாகக்கூறப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறை, தற்போதைய ஊழியர்கள் மீது அதிகவேலைப்பளு மற்றும் மேலதிக நேரப் பணி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி, ஆட்சேர்ப்பு உள்ளிட்டநிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது