கடந்த நாட்களில் ஏற்பட்ட புரவிப்புயல் மற்றும் தொடர்ச்சியான மழையினால் நெடுநு;தீவு பிரதேசத்தின் அனேக பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அனர்த்தத்துக்குள்ளானது.
வெள்ளம் வடிந்தோடமையால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வந்தனர் இந்நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மக்களது குடியிருப்புக்களில் காணப்படும் வெள்ள நீரை அப்புறப்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னின்று செயற்படுத்தினர்
இதே நேரம் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் புரவிப்பபுயலினால் கரை சேர்ந்த குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை தானக முன்வந்து தர்மரட்ணம் மாஸ்ரர் அவர்கள் மக்களுக்கு முன்மாதிரியாக குப்பைகள் கழிவுகளை அகற்றியமையும் காணமுடிந்தது
பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற போது நெடுந்தீவு பிரதேசத்தில் மேலும் பல முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும் மழை நீர்; தேங்கி நிற்கக் கூடிய பகுதிகளில் மழை நீரை தேங்க வைத்து நிலத்தடி நீரின் தன்மையினை மேலோங்க செய்ய வேண்டிய தேவைகளும் காணப்படுகின்றன