நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளுகின்ற மின்சார தடங்கல் தொடர்பான இடையூறுகளுக்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களினை எதிர்கொள்ளக் கூடிய மின்சார பொறிமுறையினை ஒன்றினை பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக நெடுந்தீவு பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
குறித்த மினசார தடை காரணமாக ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதயைடுத்து, குறித்த விடயம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் ஆராய்ந்த அமைச்சர் அவர்கள் புதிய பொறிமுறையை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சூரிய வெளிச்சம் , காற்றாலை, எரிபொருள் போன்ற மூலங்களினை கொண்ட குறித்த கூட்டு மின்சார உற்பத்தி பொறியை பொருத்தியதன் பின்னர் நெடுந்தீவு பிரதேசத்தில் மின்சார தடங்கல்கள் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி epdpnews)