இலங்கையில் இன்று முதல் வீதி சட்ட ஒழுங்குகளை முறையாக பின்பற்றாதவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது நடைபாதை மற்றும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க பொலிஸார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண அறிவித்துள்ளார். மேலும் இந்த வீதி சட்ட ஒழுங்கினை மீறும் சாரதிகள் மீது 50000 ரூபா வரை தண்டப்பணம் விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.