ஊழியர் சேமலாப நிதியத்திற்காக வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில்இருந்து 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுதாக நிதிஇராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஊடகங்களுக்குதெரிவித்துள்ளார்.
“ஊழியர் சேமலாப நிதியம் நம் நாட்டில் மிகப்பெரிய நிதியமாகும், 27 லட்சம்உறுப்பினர்கள் உள்ளனர். 2023ம் ஆண்டுக்காக ஊழியர் சேமலாப நிதியம்ஊடாக முதலீடு செய்து ஈட்டிய பணத்தில் 9 சதவீதத்திற்கு பதிலாக 13 சதவீதத்தை வட்டியாக செலுத்த தயாராக உள்ளோம்.
குறைந்தபட்ச தொகையாக 9 சதவீத வட்டியை வழங்க முடியுமாக இருந்தது. ஆனால் அரசாங்கம் 13 சதவீதத்தை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும், அதன் உறுப்பினர்களுக்கும் இதுவெற்றியாகும். இந்த நிதியை முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தின்நியாயமான பகுதி உறுப்பினர்களுக்கு செல்கிறது” என்றார்.