நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் நீண்ட காலமாக கைகொடுத்துவரும் குமுதினிப்படகு நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் மக்கள் கடற்போக்குவரத்தில் பல இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றார்கள்.
பழுதடைந்து பல மாதங்கள் நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் போன்றவற்றில் தரித்து நின்று விலைமனுக்கோரல்கள் பெறப்பட்டு திருத்த வேலைக்காக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைக் கொண்டு செல்லப்பட்டு திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
முற்று முழுதாக திருத்த வேலைகள் திறம்பட மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது ஆயினும் இவ்வருடத்திற்குள் திருத்தம் செய்யப்பட்டு மக்கள் போக்குவரத்திற்கு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நேற்றைய தினம் (ஓக்டோபர் – 06) பொதுஜன பெரமுனவின் தீவக அமைப்பாளர் திரு.ம.பரமேஸ்வரன் அவர்கள் நேரடியாக சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு அறிக்கைகள் யாவும் உரியவர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிகமான வேலைகள் இன்னும் காணப்படுகின்றது இவ்வாண்டு நிறைவு பெறுவதற்கு முன்னர் திருத்த வேலைகள் நிறைவு பெறுமா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. குமுதினிப் படகினைப் பழுதுபார்க்கும் பொறுப்பான நபரின் மகனும் மகளும் வடமாட்சியில் அண்மையில் அகலா மரணமடைந்தமையினால் வேலைகள் தற்போது மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.