தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட விசேட ஊடக அறிக்கையில், 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களிலும் தடை செய்யப்பட்ட செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதில் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது, வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களினுள் பின்வரும் செயல்களைச் செய்வது சட்டத்தால் தடை செய்யப்பட்டிருப்பதுடன், அவற்றை தவிர்ப்பது கட்டாயமானது என்று அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துதல், புகைப்படம் எடுப்பது, வீடியோ படம் எடுப்பது, ஆயுதங்களை தம்வசம் வைத்திருத்தல், புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், மதுபானம் அருந்திய நிலையில் அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்திய நிலையில் மையங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.