வவுனியா, செட்டிக்குளம் தட்டாங்குளம் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (ஜனவரி 26) நடந்துள்ளது.
ரங்கெத்கம பகுதியைசேர்ந்த நந்தன கிருசாந்த (வயது-41) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
பூவசரங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கன்ரர் வாகனத்துடன் மோதி விபத்து நடந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி சாவடைந்தார்.
விபத்துத் தொடர்பான விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.