இலங்கையின் வளித்தர சுட்டெண் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வளிமண்டலம் இன்று (பெப்ரவரி 28) அதிகமாக மாசடைந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் வளித்தரச் சுட்டெண் 126 ஆகக் காணப்படுகின்றது.
கண்டி மாவட்டத்தின் வளித்தரச் சுட்டெண் 111 ஆகவும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வளித்தரச் சுட்டெண் 106 ஆகவும், கொழும்பு மாவட்டத்தின் வளித்தரச் சுட்டெண் 89 ஆகவும், காலி மாவட்டத்தின் வளித்தரச் சுட்டெண் 91 ஆகவும், குருணாகல் மாவட்டத்தின் வளித்தரச் சுண்டென் 103 ஆகவும் கா ணப்படுகின்றது.
வளித்தரச் சுட்டெண் 101 முதல் 150 வரையுள்ள வளித்தரச் சுட்டெண்ணைக் கொண்டுள்ள பிரதேசங்களில் சிறுவர்கள், முதியவர்கள், சுவாச நோய்கள் உள்ளவர்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.