நெடுந்தீவு குறிகட்டுவான் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்;டு வரும் வடதாரகைப் படகு திருகோணமலையில் திருத்த வேலைகள் நிறைவு பெற்று கடந்த இருநாட்களுக்கு முன்னர் வருகை தந்தது.
கொரோனா தொற்று மருந்து விசிறப்பட்டு நேற்றைய தினம் சுத்திகரிப்ப செயற்பாடுகள் இடம் பெற்று இன்று காலையில் நெடுந்தீவில் இருந்து தனது சேவையினை இன்று (July 16) காலை 06.30 மணிக்கு ஆரம்பித்துள்ளது.
காலை 06.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் வடதாரகைப்படகு குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் வருகை தந்து காலை 08.00 மணிக்கு குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்படும்
மாலை மீண்டும் நெடுந்தீவில் இருந்து 03.30 மணிக்கு புறப்படும் வடதாரகை குறிகட்டுவான் துறைமுகம் வருகைதந்து மீளவும் நெடுந்தீவு நோக்கி புறப்படும்
வடதாரகைப் படகு நெடுந்தீவில் இருந்து தனது பிரயாணத்தினை ஆரம்பித்து நெடுந்தீவிலேயே நிறைவு செய்கின்றது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் காலை 06.30 மணிக்கு பிரயாணத்தினை தவறவிடும் நெடுந்தீவு பயணி ஒருவர் மீளவும் மாலையே குறிகட்டுவான் நோக்கி செல்ல முடியும் எனவே குமுதினிப்படகு திருத்தம் செய்யும் வரைக்கும் காலை 07.30 மணிக்கு பிறிதொரு படகு புறப்பட்டு மாலை 03.00 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்படுமாக இருந்தால் வியாபார நோக்கம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பிரயாணம் செய்பவர்கள் நலன் சார்ந்து அமையும்
குறிப்பாக நெடுந்தீவு மேற்குப் பிரதேசத்தில் இருந்து பிரயாணம் செய்பவர்கள் அதிகாலை வேளையிலேயே தமது பிரயாணத்தினை ஆரம்பித்து இரவு வேளையே மீண்டும் தமது இருப்பிடங்கள்கு செல்கின்ற நிலமை காணப்படுகின்றது.
கௌரவ அமைச்சர் டக்களஸ் தேவானந்தா அவர்கள் நாளைக்கு மூன்று தடவைகள் வடதாரகை தனது சேவையினை வழங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.