சூழகம் அமைப்பினால் 50 முதியோர்களுக்கு உலருணவுபொதிகள் வழங்கப்பட்டன
சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு .கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் வாழ்கின்ற பொருண்மியம் நலிவடைந்த 50 முதியோர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பெறுமதிமிக்க உலருணவு பொதிகள் மற்றும் சத்துணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .
புங்குடுதீவினை சேர்ந்த அமரர் . நாகலிங்கம் ஞானவடிவேல் அவர்களின் 31வது நினைவுதினத்தினை முன்னிட்டு அன்னாரின் குடும்பத்தினரின் நிதியுதவியில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது . சூழகம் அமைப்பின் நிர்வாககுழு உறுப்பினர்களான குணாளன் , தரங்கன் , சந்திரபாலன் , குணசீலன் , ஜீவா , ராகுலன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் .