வட மாகாண சுகாதாரத்துறையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் மொத்தமாக 8 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2 ஆயிரம் பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.
வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் உள்ள வெற்றிடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார உதவியாளர் வெற்றிடங்களே. அதேபோன்று தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் போன்ற பதவிகளிலும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.