“நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் “மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும்தொனிப்பொருளில் நெடுவூர் திருவிழா முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகத்தில் நேற்றையதினம் (ஜூலை22) வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவு ஊரும் உறவுகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிலையான அபிவிருத்தி செய்யும் வகையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கவுள்ளதுடன், திருவிழாவில் கலந்துகொள்ளும் உறவுகளுக்கான போக்குவரத்து, உணவு, பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் செய்வதற்கான துறைசார்ந்த அதிகாரிகளூடாக செய்வதற்கும், நெடுந்தீவில் உள்ள அரச, பொது நிறுவனங்களின் வளங்களை முழுமையாக பயன்படுத்த ஏற்பாடுகள் செய்வதாகவும் இக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மேலதிக தேவைகள் தேவைப்படும் வேளையில் அதற்கான முன்னேற்பாடுளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன் நெடுவூர் திருவிழா சிறப்பாக இடம்பெற்ற சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குவதாக வட மாகாண பிரதம செயலாளர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக் கலந்துரையாடலில் வட மாகாண திணைக்களங்களின் செயலாளர்கள், நிறைவேற்று தர அதிகாரிகள் , ஊரும் உறவும் நிறுவனத்தினர் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.