லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள லிட்ரோ தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே லிட்ரோ தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ 343 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 3,470 ரூபா
5 கிலோ 137 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 1,393 ரூபா
2.3 கிலோ 63 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 650 ரூபா
உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலைகளைக் கருத்தில் கொண்டு, விலை திருத்தச் சூத்திரத்தின்படி, பின்வரும் விலை திருத்தம் அமுல்படுத்தப்பட்டது.
இறுதியாக கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு மூவாயிரத்து 127 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, ஆயிரத்து 256 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேநேரம் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 587 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.