யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும்யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாஅவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும் நேற்றையதினம் (ஆகஸ்ட்28) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில்அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையுடன்ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள், பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும்ஆராயப்பட்டன.
மேலும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ்ப்பாணமாவட்டத்திற்காக 826 திட்டங்களுக்காக 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின்அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்குமாகாண அமைச்சின் பிரதமசெயலாளர் இளங்கோவன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலைஉத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட கட்டளைதளபதியின் பிரதிநிதி, மத்திய மற்றும் மாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், முப்படையினர், அரச மற்றும் அரச சார்பற்றநிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநலசேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.