யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறில் நிறுத்தப்படுவார் என்று இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று (பெப்ரவரி 5) நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் கலந்துகொண்டார்.
கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் சொலமன் சிறிலை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக இருந்த இம்மானுவேல் ஆர்னோல்ட் சமர்ப்பித்த பாதீடு இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் கடந்த 28ஆம் திகதி பதவி இழந்தார்.
புதிய முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.