யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 550 கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது தாடியால் இழுத்துச் சாதனை படைத்துள்ளார் 59 வயதான செல்லையா திருச்செல்வம்.
இவர் 400 மீற்றர் தூரம் வாகனத்தை 7 நிமிடம் 48 செக்கன்களில் கட்டி இழுத்துச் சென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை நிகழ்வு மட்டுவில் ஐங்கரன் சனசமூக நிலைய முன்றலில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவன இலங்கைக்கான கிளை தலைவர் யோ.யூட்நிமலன் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.