வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் ஜனாதிபதியின் திட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தும் நிகழ்வு வேலணை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலகங்களில் இன்று (ஏப்ரல் 28) ஏற்பாடு செய்யப்பட்டது.
பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து, அதனை அரிசியாக்கியே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.