இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான நிலைபேறான சுற்றுலாச் சான்றுப்படுத்தலிற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக விசேட கருத்தமர்வு ஒன்று நேற்று (மார்ச் 20) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஒழுங்கமைப்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்தக் கருத்தமர்வு இடம்பெற்றது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஒவ்வொரு மாகாணத்திலும் குறித்த செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் வடமாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை சுற்றுலாத்துறை சார்ந்து நிலைபேறான சர்வதேச சான்றிதழை பெற்றுக் கொடுப்பதே குறித்த கருத்தரங்கின் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தக் கருத்தமர்வில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் உபாலி ரத்நாயக்க, வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக நிரஞ்சன்,வடமாகாண சுற்றுலா பணியக பணிப்பாளர் கிஷோத்குமார் ,வடமாகாண சுற்றுலா பணியக உத்தியோகத்தர்கள்,வட மாகாண சிறிய மற்றும் நடுத்தர முயற்ச்சியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.