எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் மழைக்காலம் மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் 22 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையமாகக் கொண்டு இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இந்த வருடத்தின் இதுவரை 41,212 டெங்கு நோயாளிகள் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளனர்.