2020ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை காலம் இன்றுடன் முடிவடைகிறது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், 2021ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள பாடசாலைகள் ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து மாணவர்களும் புதிய ஆண்டில் புதிய தரத்துக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.