ஞானம் அறக்கட்டளை (Lyca -Ganam Foundation) நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(நவம்பர் 28) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர். திரு அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஞானம் அறக்கட்டளையின் உப தலைவர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் வருகை தந்திருந்தார்.
குறித்த நிகழ்வில் ஞானம் அறக்கட்டளையின் திட்டங்கள் மற்றும் திட்ட நோக்கங்கள், மிக முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான விளக்கத்தினை ஞானம் அறக்கட்டளையின் உப தலைவர் அவர்கள் கூறியிருந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற விவசாயம், மருத்துவம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு, மீன்பிடி முதலான துறைகளில் காணப்படும் தேவைப்பாடுகள் பற்றி உரிய திணைக்கள தலைவர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) திரு. சி. குணபாலன், பிரதம கணக்காளர் திரு .ம. செல்வரட்ணம், உள்ளக கணக்காய்வாளர் திரு. க. லிங்கேஸ்வரன், சமுர்த்தி பணிப்பாளர் திரு M. முபாரக், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .க. ஜெயபவானி, பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உயரதிகாரிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், அனைத்து நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.