முன்னாள் பரீட்சைகள் ஆணையர் நாயகம் மஹிந்த விஜேசிரி இன்று (18) காலை ஹொரன-கெஸ்பேவ பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என்று பிலியந்தல பொலிசார் தெரிவித்தனர்.
இவரது தனிப்பட்ட வியாபாரத்திற்காக கஹதுடுவவிலிருந்து நுகேகொவுக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது என்று பொலிசார் தெரிவித்தனர்.