ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ அவர்கள் எதிர்வரும் 06 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராகவும், நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் பதவி பிரமாணம் செய்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா சென்று நேற்று நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஸ. இரட்டை பிரஜாவுரிமை உடையவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாது என்று அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் மூலம் கொண்ட்டு வரப்பட்டு இருந்த தடை கிடையாது.
இதன்படி பெரமுனவின் தேசிய பட்டியல் எம். பி பேராசிரியர் ரஞ்சித் பண்டார ராஜினாமா செய்து பசிலுக்கு இடம் கொடுப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2010 -2015 கால பகுதியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.