நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து காலை 07.00 மணிக்கு நெடுந்தாரகை புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆயினும் காற்று காரணமாக கடல் வற்றிய நிலையில் காணப்படுவதால் படகினை செலுத்த முடியாத நிலமையேற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இக்காலப்பகுதி சோழகக் காற்றுக்காலத்தில் காலையில் கடல் வற்று ஏற்படுவது வழமை இந்நிலமை சாதரணமாக இன்றும் மூன்று மாதங்களுக்கு தொடரும் அகவே பொறுப்பு வாய்ந்தவர்கள் இது தொடர்பாக கலந்துரையாடி மக்களுக்கு ஏற்ற போக்குவரத்து நிலமையினை ஏற்படுத்த முன்வரவேண்டும்
இன்று (ஜீன் 25) காலையில் படகு புறப்படும் என்பது அறிந்து 50ற்கு மேற்பட்ட பிரயாணிகள் இறங்கு துறைமுகத்திற்கு வருகை தந்து பயன ஆயத்தம் செய்யப்பட்டபோதும், குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னரே காரணம் அறிவிக்கப்பட்டது.
வைத்தியசாலை செல்வோர் அவசர தேவைகளின் நிமித்தம் காலையில் யாழ் செல்லவேண்யுள்ளோர் பலர் காணப்பட்டனர். அத்துடன் யாழில் இருந்து நெடுந்தீவுக்கு பணி நிமித்தம் வருவோரும் குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகமளிக்க முடியாத நிலமை காணப்படும்.
இன்றயை நிலமையினைக் கருத்திற் கொண்டு பின்னர் காளிகாம்பாள் படகு விரைந்து பிரயாணிகளை ஏற்றிக் குறிகட்டுவான் துறைமுகம் நோக்கி புறப்பட்டது.
இது தொடர்பாக பிரதேச சபை தலைவர் அவர்கள் தொடர்பு கொண்டு இந்நிலைமை தொடரும்சூழல் காணப்படுவதால் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி காலையில் வற்று நேரத்திலும் பயனிக்க கூடிய தனியார் மற்றும் பல நோக்குகூட்டுறவு சங்க படகுகளை ஒழுங்கு படுத்துவதற்கன ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.