புதிய மின்சார உற்பத்தித் திட்டத்துக்கு, எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (மார்ச் 8) நாடா ளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் மின்சார கட்டணம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மின்சார சபையின் இழப்பை ஈடுகட்ட கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின்சார உற்பத்தி திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். மின்சார சபை ஊழலை குறைக்க ஆலோசனைகளை வழங்குகிறோம். ஆனால் அதற்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர்.
மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்கப்படும். அந்த திட்டத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். அப்போது ஜூலை மாதத்திற்குள் மின்கட்டணத்தை குறைக்கலாம் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.