யாழ். மாவட்ட நாடாளுமன்ற நாற்காலி ஒன்று காலியானது -7 இல் இருந்து 6 ஆகியது-
2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இத் தகவலை வெளியிட்டுள்ளார்.
2020 வாக்காளர் பட்டியலில் மக்கள் தம்மை இணைத்துக்கொள்வதில் காட்டிய அக்கறையீனம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் வாக்காளர் பட்டியலில் பதிவது தொடர்பில் விழ்ப்பூடாமை என்பனவே காரணமாகும்.
யாழ்.மாவட்டத்தில் இழக்கப்பட்ட உறுப்புரிமை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்படுவதன் ஹம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 18 இல் இருந்து 19 ஆக அதிகரித்துள்ளது.