மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும்அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டசெயலக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஆர்.சிவகரன்தலைமையில் நேற்றையதினம் (மார்ச்06) மாவட்ட செயலக மோட்டார்போக்குவரத்து பிரிவு முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாணமாவட்டத்தில் இத்தகைய இரண்டு எஞ்சின்களை கொண்ட மோட்டார்சைக்கிளை வடிவமைப்பு செய்து மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்துவதற்குஏதுவாக அமைத்தமை சிறப்பான விடயம் எனவும் அதிகளவில் மாற்றுவலுவுள்ளபெண்கள் இவ் சாரதி அனுமதிப்பத்திரத்தினை பெற்றுகொள்ள வந்திருப்பதுமகிழ்ச்சியளிப்பதாகவும் இத்தகைய மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டுஅதற்கென தனித்துவமாக இலக்கத்தகடுகள் உருவாக்கப்பட்டிருப்பது எமதுமாவட்டத்தின் தொழில்நுட்ப அறிவினை பறைசாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக மாற்றுவலுவுள்ளோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்வழங்குவதற்காக எழுத்துப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சைகள் என்பனஏற்கனவே நடத்தப்பட்டிருந்தன.அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தினைஅரசாங்க அதிபர் அவர்கள் வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் கடந்த 2022ஆம் ஆண்டுஒக்டோபர் மாதம் கைதடி மாகாண சபைக் கட்டடத்தொகுதியில் நடாத்தப்பட்டநடமாடும் சேவையின் போது மாற்றுவலுவுள்ளோரினால், மோட்டார்போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் அவர்களுக்குமுன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், உள்ளூரில்வடிவமைக்கப்பட்ட மோட்டார் வண்டிகளை திணைக்களத்தின் தொழில்நுட்பப்பிரிவினரால் பரிசீலிக்கப்பட்டு அந்த வாகனங்களுக்குரிய அடிச்சட்டஇலக்கங்கள் பொறிக்கப்பட்டன. அதன் பின்னர் குறித்த வாகனங்களிற்கு 325-6000 என்ற தொடர் இலக்கங்கள் ஒதுக்கப்பட்டு குறித்த வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டு பதிவுச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும்அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதன் மூலமும் அவர்களுக்குவாகனத்தை செலுத்துவதற்கான அங்கீகாரம் மோட்டார் போக்குவரத்துதிணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் உள்ளூரில் வடிவமைக்கப்பட்டவாகனங்களைப் பதிவு செய்து, அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம்வழங்கப்படுவது யாழ்ப்பாண மாவட்டத்திலேயே முதன்முதலாகநடைபெறுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.