மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று (3) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடமை முடிந்து தனது வீடு திரும்பும் வழியில் கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்படுகிறது. எனவே அவர் இனம் தெரியாத நபர்களினால் கூறிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்று வரும் மண் அகழ்வு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக இவர் குரல் கொடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.