நெடுந்தீவை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பிரித்தானிய நெடுந்தீவு ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில ஒருவரும் முன்னளாள் தலைவருமான திரு.செல்வரட்ணம் சுரேஷ் அவர்கள் இயற்கை எய்தினார்.
நெடுந்தீவு மண் மீது பிரியம் கொண்ட இவர் கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளில் தனது பங்களிப்பினை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது நெடுந்தீவு மண் மீதும் மக்கள் மீதும் அளவற்ற அன்பு கொண்டவர் அமரர் சுரேஷ் செல்வரட்ணம் அவர்கள்
கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கிய செயற்பாட்டளராக விளங்கிய இவர் இவ் அமைப்பின் ஊடாக பாதிக்கப்பட்ட வட கிழக்கு மாகாணங்களில் பல்வேறு செயற்றிட்டங்களிற்கு கடந்த காலங்களில உதவியளித்திருந்துடன் நெடுந்தீவு மக்கள் உள்நாட்டில் வாழ்கின்ற பலவேறு கிரமாங்களுக்கும் தன்னாலான உதவிகளை வழங்கியிருந்தார்
நெடுந்தீவு பிரித்தானிய விளையாட்டுக்கழகத்தின் மத்திய குழு உறுப்பினராக விளங்கிய இவர் அதற்கூடாவும் பல் பணிகளை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது லண்டனில் வாழும் இளைஞர்களை இவ்வமைப்பின் ஊடாக உள்வாங்கி எதிர்காலங்களில் நெடுந்தீவு மண் மீது அடுத்த சந்ததிக்கு தொடர்பினை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்புடன் செயற்பட்டவர்
மண்மீது மக்கள் மீதும் அதீத பற்றுக் கொண்ட நெடுந்தீவு பிரித்தானிய ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் சுரேஸ் செல்வரட்ணம் அவர்களும் கனடா மக்கள் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் திரு.சின்னத்துரை பரராஜ சிங்கம் அவர்களது இழப்பும் நெடுந்தீவு மண்ணுக்கு பேரிழப்பாகும்.