ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணத்தில் நாடளாவிய ரீதியில்குறைந்த வருமானத்தக் கொண்ட குடும்பங்களுக்கு இரண்டு மாதத்திற்கு 20 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டமானது நேற்றையதினம்(ஏப்ரல்21) நாடளாவிய ரீதியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர்பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட மொத்தமாக 34146 குடும்பங்களுக்கு இந்தஇலவச அரிசி நிவாரணம் வழங்கப்படுகின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வு புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலகத்தில் இன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான சி.ஜெயக்காந் (காணி) அவர்களின் தலைமையில் காலை9.30 மணியளவில் அரிசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்திரு.எஸ்.குணபாலன் (நிர்வாகம்) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்கள் ஒரு தொகுதியினருக்கு முதற் கட்டமாக பத்து கிலோஅரிசிப்பொதியினையும் வழங்கிவைத்தார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் மொத்தமாக 10645 குடும்பங்கள் இந்த இலவச அரிசி நிவாரணத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்திஉத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள் , பயனாளர்கள் எனப் பலரும்கலந்துகொண்டனர்.