மாதகல் சகாயபுரம் கிராம அபிவிருத்தி முன்பள்ளி புனரமைப்பின் பின்னரான திறப்பு விழாவும் கல்விச் செயற்பாடு ஆரம்ப நிகழ்வும் நேற்று (மார்ச் 15) நடைபெற்றன.
கட்டட புனரமைப்பு வேலைகளுக்கு “கிராமத்திற்கு 3 மில்லியன்” திட்டம் ஊடாக நிதி வழங்கப்பட்டிருந்தது. குழாய்க் கிணறு, நீர்த்தாங்கி, மலசலகூடம் என்பன ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதிச் செலவில் சீரமைக்கப்பட்டன.
அதேநேரம், மாதல் நலன்புரிச் சங்கம் ஊடாகக் கிடைத்த 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபா நிதியில் இரு பக்க பாதுகாப்பு வேலி, குடி தண்ணீர் விநியோக வேலைகள், முன்பள்ளிக் கட்டடத் திருத்த வேலைகள், வர்ணப் பூச்சிகள் என்பன முன்னெடுக்கப்பட்டன.