வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் ஏழாவது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளன.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்பட்ட உயர் தர பரீட்சைகளில் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை 070-355 5970 அல்லது 070-355 5979 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் அறிய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.