ஊரும் உறவும் நிறுவனத்துடன் இணைந்து எழுநா நிறுவனம் நடாத்தும்தங்கத்திரவம்“குடிநீர்”பற்றி மக்கள் மத்தியில் விழிப்படையச் செய்து மக்களின்வாழ்வியலை மழைநீருடன் இயற்கையாக வாழ்தல் என்ற மாபெரும் விழிப்புணர்வு செயற்திட்டத்தில் 1ம் செயற்பாடு அண்மையில் நெடுந்தீவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வு கடந்த ஞாயிற்றுகிழமை (செப்.29) நெடுந்தீவில் உள்ள அசெம்பிளிஒவ் கோட் தேவசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயற்திட்டமானது நெடுந்தீவில் குடிநீர் தேவை பாரிய பிரச்சினையாகதொடர்ந்து செல்வதனால் எவ்வாறு நீரைப் பாதுகாத்து அனைத்து மக்களிற்கும்கிடைக்கும் வகையில் சூழல் சமநிலையினை பாதுகாத்து நீர்முகாமைத்துவம்சீர் செய்யப்பட்டு எமது எதிர்கால சந்ததி வளம் மிக்கவர்களாக வாழ உதவும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான கருத்து வெளிப்பாட்டு குறும்படமும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு காண்பிக்கப்பட்டதை குறிப்பிடத்தக்கது.