மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதிமரியாதைக்காக ஜூலை 3. புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு பாராளுமன்றஅலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் இறுதிக்கிரியைகள் அவரது சொந்த இடமானதிருகோணமலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னர் நாளை (ஜூலை02) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்குகொழும்பு – பொரளையில் ஏ.எவ்.றேமண்ட் மலர்ச்சாலையில் பூதவுடல் மக்கள்அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அங்கிருந்து அவரது பூதவுடல் நாளைமறுதினம் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குநாடாளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டு, அங்கு வைத்து அஞ்சலியும் மரியாதையும்செலுத்தப்படவுள்ளது.
அதன்பின்னர் பிற்பகல் 4 மணிக்கு பூதவுடல் நாடாளுமன்றத்தில்இருந்து அவரது சொந்த இடமான திருகோணமலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது. அங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள்இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.