நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதக்கு வழங்கப்பட்டுள்ள மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை புதிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம்எனக்கோரி நெடுந்தீவு பிரதேச மக்கள் ஆளுநரை நெடுந்தீவு பிரதேசசெயலகத்தில் சந்தித்து முறையிட்டனர்.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குறைகேள்சந்திப்பில் பங்குகொள்வதற்காக நெடுந்தீவுக்கான விஜயத்தை இன்று (மார்ச் 05) மேற்கொண்டிருந்த வடமாகாண ஆளுநரையே மக்கள் சந்தித்தனர்.
இதன்போது மாதுபான விற்பனை நிலைய அனுமதிக்கு எதிராக தங்களது தரப்பு நியாயங்களை மக்கள் தெரிவித்ததுடன் இது விடயமாக் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ் அனுமதி தொடர்பில் நேற்றையதினம் (மார்ச் 04) நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் ஒன்றினை நடாத்தியருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.