நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பில் 3 சுயேச்சைகுழுக்கள் நேற்று (செப். 30) மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தில்கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளன.
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில்போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தும் நடவடிக்கைகள்ஆரம்பிக்கப்பட்டடுள்ளன.
இதற்கமைய மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளைமோகன் தலைமையில் சுயேச்சைகுழுவில் 8 பேர் போட்டியிடுவதற்காக முதல்முதலாக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
அதேவேளை, மட்டக்களப்பு நல்லையா வீதியைச் சேர்ந்த அரச திணைக்களத்தில்கடமையாற்றி ஓய்வு பெற்ற 81 வயதுடைய கனகசூரியம் சோமாஸ்கந்தமூர்த்திதலைமையில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடுவதற்கு 8 பேருக்கானகட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அலிசாஹீர் மௌலானாவின் ஊடகசெயலாளர் அஸ்மி தலைமையில் சுயேச்சைக்குழுவில் 8 பேர் களமிறக்கப்பட்டுஅதற்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளனர்.