மத நல்லிணக்கத்திற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட கிறிஸ்தவ மதப் போதகர் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பொறுப்பற்ற கருத்துக்களால் மத முரண்பாடுகள் உருவாகி நாட்டின் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபல கிறிஸ்தவ மதப் போதகரான ஜெரோம் பெர்னாண்டோ, புத்தரையும் மற்ற மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டிருந்தார்.
இது குறித்த காணொளி ஒன்று அண்மைய நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
எவ்வாறாயினும், போதகரின் இந்த கருத்துக்கு எதிராக நவ பிக்கு பெரமுன இன்று (15) கோட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், குறித்த போதகர் தெரிவித்த கருத்து தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.