அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, உருளைக்கிழங்கு 75 ரூபாய் குறைக்கப்பட்டு 350 ரூபாய்க்கும், கோதுமை மா 5 ரூபாயினால் குறைப்பட்டு 190 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
வெள்ளை கௌபி 110 ரூபாயினால் குறைப்பட்டு 990 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படும் என்றும், சிவப்பு கௌபி 45 ரூபாயினால் குறைக்கப்பட்டு 950 ரூபாய்க்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், காய்ந்த மிளகாய் 20 ரூபாயினால் குறைக்கப்பட்டு 780 ரூபாய்க்கும், நெத்தலி 20 ரூபாயினால் குறைக்கப்பட்டு 930 ரூபாய்க்கும், கடலைப் பருப்பு 15 ரூபாயினால் குறைக்கப்பட்டு 185 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதோச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.