நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு – 7 நிகழ்வு வியாழக்கிழமை (ஜூலை 04) மாலை 3.00 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது நெடுந்தீவு மண்ணின் இளம் படைப்பாளர்களை ஊக்குவிக்கவும், வெளிக்கொணரவும் நெடுந்தீவு பாடசாலைகளில் இருந்து இளம்கவிஞர்களின் ஆக்கங்களை பெற்று “பேரொளி” எனும் கவிதைத்தொகுப்பினை, நிகழ்வின் அனுசரணையாளரான வள்ளித்தமிழ் அமுதம்செயற்பாட்டு குழுவினரால் வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை கவிதை தொகுப்பிற்கான ஆக்கங்களை வழங்கிய இளம்கவிஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு மற்றும் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் நூல் இரவல் வழங்கும் பிரிவான இரகுபதி நினைவு நூலகத்தினைதொடர்ந்து பயன்படுத்தும் சிறந்த வாசகர்களுக்கான விருது என்பனவும் வழங்கப்படவுள்ளது.